சீன எதிர்ப்புக்கு இடையே பிரான்ஸ் செனட்டர் குழு தாய்வான் பயணம்

தாய்வான் வான் பகுதிக்குள் சீன போர் விமானங்கள் தொடர்ச்சியாக ஊடுருவிய சூழலில் பிரான்ஸ் செனட்டர்களின் குழு ஒன்று தாய்வானுக்கு ஐந்து நாள் விஜயமாக பயணித்துள்ளது. இந்தப் பயணம் பிரான்ஸின் உறவில் பாதிப்பை எற்படுத்தக் கூடும் என்று சீனா எச்சரித்துள்ளது.

செனட்டர் அலைன் ரிச்சர்ட் தலைமையிலான இந்தக் குழு தாய்வான் ஜனாதிபதி ட்சாய் இங்-வென், அந்நாட்டு பொருளாதார மற்றும் சுகாதார அதிகாரிகள் மற்றும் தலைநில விவகார சபை ஆகியோரை சந்திக்கிறது. பிரான்ஸ் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான ரிச்சர்ட் 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளிலும் தாய்வான் வந்துள்ளார்.

இந்தப் பயணம் சீனாவின் முக்கிய நலன்களை மாத்திரமன்றி சீன- பிரான்ஸ் உறவை குறைமதிப்புக்கு உட்படுத்துவதோடு பிரான்ஸின் புகழ் மற்றும் நலனையும் பாதிக்கும் என்று பிரான்ஸில் உள்ள சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

தாய்வானை தனது சொந்த நிலம் என கருதும் சீனா, அதனுடனான எந்த ஒரு சர்வதேச ஒத்துழைப்பையும் எதிர்த்து வருகிறது.

Sat, 10/09/2021 - 15:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை