ரிசாத் எம்.பியை விடுவிக்க கோரி ஐ.ம.ச மகஜர்

40 எம்.பிக்கள் சபாநாயகருக்கு கடிதம்

ரிசாத் பதியூதீன் மீது குற்றச்சாட்டுகள் இருந்தால் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனின் அவரை விடுவிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கோரியுள்ளது.

அது தொடர்பில் எழுத்துப்பூர்வமான கடிதத்தில் சுமார் 40 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ரிஷாடுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை உடனடியான பாராளுமன்றத்திற்கு அறிவிக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் ஐக்கிய மக்கள் சக்தியினர் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Mon, 10/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை