ஆசிரியர்களை கடமைக்கு சமூகமளிக்குமாறு முருத்தெட்டுவே ஆனந்த தேரர் அழைப்பு

கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் போது ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு தாம் கேட்டுக் கொள்வதற்காக நாரஹேன்பிட்டி அபயராம விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் தம்மை சந்திக்க வந்த பிரதேச மக்கள் மத்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கான தீர்வை மேலும் காலதாமதம் செய்யாமல் அரசாங்கம் அதற்கு விரைவான தீர்வொன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாம் அரசாங்கத்தை கேட்டுக் கொள்வதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 21ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் மாணவர்களின் எதிர்காலம், நாட்டின் தற்போதைய கொரோனா வைரஸ் சூழ்நிலையை கருத்திற் கொண்டு அனைத்து ஆசிரியர்களும் கடமைக்குத் திரும்ப வேண்டும் என தாம் கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேரரை சந்தித்த பெற்றோர்கள் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு ஆசிரியர்கள் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதற்கான அழைப்பை ஆசிரியர்களுக்கு விடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 10/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை