எதிர்வரும் நாட்களில் நாட்டின் பல பாகங்களிலும் பலத்த மழை

எதிர்வரும் நாட்களில் நாட்டின் பல பாகங்களிலும் பலத்த மழை-Weather Forecast-Heavy Rain

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் எதிர்வரும் சில நாட்களில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதற்கமைய, மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைப்பெய்யக்கூடுமென அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டின் மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடுமென்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்களை அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Thu, 10/21/2021 - 06:52


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை