உய்குர் முஸ்லிம்கள் கடும் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர்

முன்னாள் சீன பொலிஸ் அதிகாரி தகவல்

சீனாவின் ஸின்ஜியாங் மாநிலத்தில் வாழும் சிறுபான்மை உய்கர் முஸ்லிம் சமூகத்தின் மீது சீன அரசு மிருகத்தனமான அடக்குமுறைகளை மேற்கொள்வதாகவும் யுத்தத்தில் எதிரிகளைப்போல நடத்தப்படுவதாகவும் முன்னாள் சீன பொலிஸ் உத்தியோகத்தர் சி.என்.என் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சி.என்.என் ஐரோப்பிய நாடொன்றில் மேற்கொண்ட இந்த பேட்டியில் கலந்துகொண்ட மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர் தான் சீன பொலிஸ் துறையில் பணியாற்றியமைக்கான ஆதாரங்களை வெளிப்படுத்தினார்.

உய்கர் முஸ்லிம்கள் நூற்றுக்கணக்கில் வாழும் கிராமங்களுக்குச் சென்று வீடுகளில் இருந்து மக்களை வெளியே இழுத்து அவர்களின் முகங்களை மூடியும், கைகளுக்கு விலங்கிட்டும் எதிர்த்தால் சுட்டுக்கொல்வோம் என பயமுறுத்தியும் அவர்களை பணிய வைப்போம் என்றும் அவர் இந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

உய்கர் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்ட ரீதியாக கடுமையான துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்கள் தடுப்பு முகாம்களில் வைக்கப்படுவதாகவும் தனது மூன்று மணித்தியால பேட்டியில் குறிப்பிட்ட அவர், சித்திரவதைகள் பல்வகைப்படும் என்றும் தலைகீழாக தொங்கவிடுதல், மின்சாரம் பாய்ச்சுதல், பாலியல் துன்புறுத்தல் போன்ற பல கொடிய சித்திரவதைகளுக்கு அவர்கள் உட்படுத்தப்படுகிறார்கள் என்றும் ஆனால் கைது செய்யப்படும் பெரும்பாலானோர் குற்றம் செய்யாதவர்கள் என்றும் அவர்கள் சாதாரண மக்கள் என்றும் கூறியுள்ளார். ஆனால் உய்கர் முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று வெளியாகும் தகவல்களை சீனா மறுத்து வருகிறது.

Sat, 10/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை