தரீக் ஈ லப்பாயிக் பாகிஸ்தான் கட்சித் தலைவர் காவலில்

விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

தடுபபுக்காவலில் வைக்கப்பட்டுள்ள தமது தலைவரை விடுவிக்கும்படி கோரி தரீக் ஈ லப்பாயிக் பாகிஸ்தான் கட்சி தனது லாகூர் தலைமையகத்துக்கு அருகே ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது. இக்கட்சியின் தலைவர் ஹாஃபிஸ் சாத் ஹுஸைன் ரிஸ்வியை பஞ்சாப் அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியே தடை செய்யப்பட்டுள்ள கட்சியின் தொண்டர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

ஹுசைன் ரிஸ்வி கடந்த ஏப்ரல் 12ம் திகதி பொது ஒழுங்கை பேணுவதற்காக என்ற காரணத்தை முன்வைத்து பஞ்சாப் அரசினால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். பின்னர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஜுலை 10ம் திகதி மீண்டும் கைது செய்யப்பட்டார். இதையடுத்தே இக்கட்சி ஆர்ப்பாட்டத்தைப் பயன்படுத்தி ரிஸ்வியின் விடுதலையைத் தாமதப்படுத்தி வருவதாக இக்கட்சியினர் கூறிவருகின்றனர்.

ரிஸ்வி கைது செய்யப்பட்டதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த தனி நீதிபதி அமர்வு அதைத் தள்ளுபடி செய்ததை எதிர்த்து பஞ்சாப் அரசு சமர்ப்பித்த மேன்முறையீட்டை லாகூர் நீதிமன்றம் இன்னும் விசாரிக்கவில்லை. இம்மனுவை விசாரிக்க புது அமர்வு ஒன்று ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகறது.

Tue, 10/26/2021 - 08:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை