மாகாண சபை தேர்தல்கள் இப்போதைக்கு சாத்தியமில்லை

முதலில் தேர்தல் முறையை மாற்றியமைக்க வேண்டும்

 

தேர்தல் முறைமையில் திருத்தம் செய்யப்படாது மாகாண சபைத் தேர்தலை இந்த வருடத்திற்குள் நடத்துவதற்கான சந்தர்ப்பம் இல்லையென அமைச்சர்  டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். தேர்தல் முறைமையில் திருத்தம் ஏற்படுத்தப்பட்ட பின்னரே மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான நிலைப்பாட்டில் ஜனாதிபதி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த வருடத்தில் இரண்டு மாதங்களே எஞ்சியுள்ள நிலையில் தேர்தல் முறைமையில் திருத்தத்தினை ஏற்படுத்தி மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பம் இல்லை.

அத்துடன் எரிபொருள் கடனை வழங்குவதற்காகக் குறித்த தேர்தலை நடத்துமாறு இந்தியா எந்தவொரு நிபந்தனையினையும் விதிக்கவில்லையென அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.

ஷம்ஸ் பாஹிம்

Thu, 10/21/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை