தன்னைக் கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரி சென்ற சிறுவன்

சாவகச்சேரியில் 15 வயது மாணவன் துணிச்சல்

 

யாழ்.சாவகச்சேரியில் நாக பாம்பு கடிக்கு இலக்கான 15 வயது சிறுவன், தன்னை கடித்த நாக பாம்புடன் வைத்தியசாலைக்கு சென்ற நிலையில், சிறுவன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ். சாவகச்சேரி நுணாவில் பகுதியில் 15 வயதான இச் சிறுவன் நண்பர்களுடன் வயலுக்கு சென்றிருந்தபோது பாம்பு கடித்துள்ளது.

இதனையடுத்து அந்த சிறுவனும் அவனுடைய நண்பர்களும் இணைந்து கடித்த பாம்பை பிடித்து போத்தலில் அடைத்துக் கொண்டு சாவகச்சோரி வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.இதன்போதே சிறுவனை கடித்தது நாக பாம்பு என தெரியவந்துள்ளது.இதனையடுத்து பாம்புக்கடிக்கு இலக்கான சிறுவன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருக்கின்றார்.

யாழ்.விசேட நிருபர்

Mon, 10/18/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை