பாகிஸ்தானில் வன்முறையில் ஈடுபடும் தெரீக் ஈ லபாய்க் பாகிஸ்தான்

பாகிஸ்தானின் சுன்னி மதப் பிரிவில் காணப்படும் உட்பிரிவுகளான பாரல்வி பிரிவு அந்நாட்டில் தீவிரவாதத் தன்மையுடன் இயங்கி வருவதாகவும் ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஆரம்பமான அதன் அரசியல் முகமான 'தெரீக். ஈ. லபாய்க் பாகிஸ்தான்' கட்சி மத வன்முறைகளில் ஈடுபடுவதாகவும் டிப்ளோமட் பத்திரிகையில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குன்வார் குல்துன் ஷாஹிட் எழுதியுள்ள இக்கட்டுரையில், சுன்னி பிரிவின் தியோபந்தி மற்றும் வஹாபி சித்தாந்தங்களுடன் இது கடுமையாக முரண்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் ஆட்சிக்கு வரும் அரசுகள் பெரும்பாலானோர் விரும்பும் மதப் பிரிவுக்கு ஆதரவாக இருக்கும் வழக்கத்தைக் கொண்டவை. 1974 இல் அஹமதியா பிரிவு பிரச்சினையை சந்தித்தது.

1980 களில் ஷியா உல் ஹக் ஆட்சியில் ஷியா பிரிவு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்தது. தற்போது தெரீக் ஈ லபாய்க் கட்சி தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதாக இக்கட்டுரை குறிப்பிடுகிறது.

கடந்த வருடம் பிரெஞ்சு கேலிச்சித்திர இதழில் இஸ்லாமிய நம்பிக்கைகளை கேலி செய்யும் வகையில் வெளியான கேலிச்சித்திரத்தையடுத்து இக்கட்சி வன்முறைகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக்கட்சி பிற மதங்களுக்கு எதிராகவும், தெய்வ நிந்தனை குற்றச்சாட்டுகளை சுமத்தி வன்முறைகளில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

19ம் நூற்றாண்டில் இந்திய உத்தரபிரதேச பாரல்வி நகரத்தைச் சேர்ந்த அஹ்மட் ராசாகான் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டதே பாரல்வி இயக்கமாகும். சூபியத்தில் இருந்து சில அம்சங்களை தன்னுள் கொண்டுள்ள பாரல்வி, புனிதர் வணக்கத்தை ஏற்றுக்கொள்வதோடு நபிகள் நாயகத்தையும் வணக்கத்துக்குரியவராக கொள்கிறது.

Wed, 10/20/2021 - 09:52


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை