வியன்னா சீன தூதரகத்துக்கு எதிரே திபெத்தியர் ஆர்ப்பாட்டம்

கடந்த வௌ்ளியன்று சீனா தனது தேசிய தினத்தைக் கொண்டாடிய போது வியன்னாவில் அமைந்துள்ள சீனத் தூதரகத்துக்கு எதிரே ஒஸ்டிரியாவில் வசிக்கும் திபெத்தியர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒஸ்டிரியாவின் பல பகுதிகளில் இருந்து மிதிவண்டியில் பவனியாக வந்த திபெத்தியர்களும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு திபெத் விடுதலைக்காகவும், தலாய்லாமாவை வாழ்த்தியும் கோஷங்களை எழுப்பினர். திபெத் இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டுமென்றும் கொரோனா வைரஸ் ஒரு சீன வைரஸ் என்றும் இங்கே கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பகல் பொழுதில் நடைபெற்ற இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 150 திபெத்தியர் கலந்துகொண்டிருந்தனர்.

Mon, 10/04/2021 - 08:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை