பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்தலில் அரசு திருப்தி

விரைவில் விலைகள் சுமுக நிலைக்கு வரும்

பாரிய நாடுகள் கூட நிதி நெருக்கடி நிலையில் உள்ளபோது எமது நாட்டில் இந்தளவிலாவது பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த முடிந்துள்ளமை குறித்து திருப்தி கொள்ள முடியும் என இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு தொடர்பில் பல்வேறு விமர்சினங்கள் முன்வைக்கப்படுகிறது.

டொலரின் பெறுமதி அதிகரிப்பு காரணமான இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. கொரோனா தொற்றுநிலையில் அநேக நாடுகளில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் கூட பாரிய நெருக்கடி நிலை உள்ளது.இந்த அளவிலாவது நிலைமையை கட்டுப்படுத்த முடிந்திருப்பது குறித்து திருப்தி அடையலாம். தேவையின்றி சந்தையில் தலையீடு செய்ய அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை. அத்தியாவசிய சேவை ஆணையாளரின் அதிகாரங்கள் குறைக்கப்படவில்லை.

ஷம்ஸ் பாஹிம்

Wed, 10/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை