தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க பணிப்புரை

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு பவித்ரா உத்தரவு

கொவிட் தொற்று காரணமாக முன்னெடுக்கப்படாமலிருந்த தனியார் பஸ் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க, பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறு போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு பணிப்புரைவிடுத்துள்ளார்.

தனியார் பஸ் உரிமையாளர்களுடன் போக்குவரத்து அமைச்சில் நேற்று (28) நடைபெற்ற கலந்துரையாடலையடுத்து மேற்படி பணிப்புரையை அமைச்சர் வழங்கியுள்ளார். இக்கலந்துரையாடலின் போது வீதி அனுமதிக் கட்டணம் செலுத்துவதற்கும் குத்தகைக் கடன் தவணைகளை செலுத்துவதற்கும் சலுகைக் கால அவகாசம் வழங்குமாறு தனியார் பஸ் உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீதி அனுமதிப்பத்திரமின்றி, அலுவலக சேவை என்ற அடிப்படையில் சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவும் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

Fri, 10/29/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை