சகல சமூகங்களினதும் பாதுகாப்பில் அரசு உறுதி

முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பில் அக்கறை

இலங்கையில் உள்ள முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்துள்ளது.

அனைத்து இலங்கையர்களும் ஒழுக்கமான வாழ்க்கை வாழ்வதை உறுதி செய்ய  அரசுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் டாக்டர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து சில சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், குண்டுவெடிப்பு தொடர்பாக அதிகாரிகளால் நடத்தப்பட்ட விசாரணைகள் எந்த குறிப்பிட்ட சமூகத்தையும் குறிவைக்கவில்லை என்று அவர் கூறினார். தாங்கள் பொறுப்புள்ள அரசு என்றும் முஸ்லிம்கள், தமிழர்கள் மற்றும் சிங்களவர்கள் உட்பட நாட்டின் அனைத்து சமூகங்களின் நலன்களையும் தாங்கள் கவனிப்போம் என்ற உண்மையை மீண்டும் வலியுறுத்த விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.

 

Thu, 10/21/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை