பெருந்தோட்ட பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட பல வீடமைப்பு திட்டங்கள் இன்று கையளிப்பு

இந்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட பல வீடமைப்புத் திட்டங்கள் இன்று மக்களுக்கு கையளிக்கப்படும் என தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் முழுமை பெறாத இராகல லிடஸ்டல், கண்டி பன்வில கலாபொக்க டியனில பிரிவு,மாத்தளை ரத்தோட்ட,உனுகல,ஹப்புத்தளை ஷாவூட், நாவலப்பிட்டிய குயின்ஸ்பேரி பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் குடிநீர், மின்சாரம் பாதை வசதிகள் என சகல உட்கட்டமைப்பு வசதிகளும் பூர்த்தியாக்கப்பட்ட நிலையில் இன்று பயனாளிகளுக்கு கையளிக்கப்படுகிறது.பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் இணைய வழியூடாக வீடமைப்பு திட்டங்கள் கையளிக்கப்பர்.

ஹற்றன் விசேட நிருபர்

 
Mon, 10/04/2021 - 08:58


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை