தலிபான்கள் மீள் அறிமுகம் செய்யும் கொடூர தண்டனைகள்

மேற்குலக அவதானிகள் வேதனை

ஆட்சியில் அமர்ந்துள்ள தலிபான் அரசு தமது பழைய முரட்டு சட்டங்களை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவராது என்று அதன் ஆரம்ப நாட்களில் தெரிவிக்கப்பட்டபோதும் தலிபான் சிந்தனையில் மாற்றம் இல்லை என்பது நிச்சயமாகி உள்ளதாக மேற்குலக அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் ஹேரத் நகரில் கடத்தல் குற்றச்சாட்டுகளின் பேரில் நால்வர் கொல்லப்பட்டு பொது இடமொன்றில் தொங்க விடப்பட்டிருந்தனர். ஆள்கடத்தலில் ஈடுபடுவோருக்கு இதுதான் கதி என ஒருவரின் ஆடையில் எழுதி ஒட்டப்பட்டிருந்தது. இச்சம்பவம் உலகெங்கும் அதிர்ச்சியும் மத்திய காலத்து தண்டனைகள் மீளவும் அறிமுகம் செய்யும் தலிபான்களின் நடைமுறை பலருக்கு விசனத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இன்றைய உலகில் மரணதண்டனை வழங்கப்படும் வழக்கம் பல நாடுகளில் காணப்பட்டாலும் அவை பகிரங்கப்படுத்தப்படுவதில்லை. சீன அரசர் காலத்தில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்த பின்னர் மக்கள் பார்வைக்காக பொது இடங்களில் சடலங்கள் தொங்கவிடப்படும் வழக்கம் இருந்தது. 1485 காலப்பகுதியில் பிரிட்டன் அரசர் எட்டாம் ஹென்றி தனது அமைச்சர் தோமஸ் குறொம்வெல்லின் தலையை சீவி லண்டன் பாலத்தில் குத்தீட்டியில் செருகி காட்சிக்காக வைத்திருந்ததையும் சுட்டிக்காட்டும் இவர்கள், நாடுகள் இத்தகைய கொடூரமான வழக்கங்களில் இருந்து மீண்டுவிட்டாலும் தலிபான்கள் இப்பழைய தண்டனை முறைகளை ஆப்கானிஸ்தானில் மீளவும் அறிமுகம் செய்வதாகக் குற்றம் சமத்தியுள்ளனர்.

குற்றங்களைக் குறைப்பதற்கு கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றாலும் அவை மிருகத்தனமாக இருக்கக்கூடாது என மேற்குலக அவதானிகள் கூறியுள்ளனர்.

Wed, 10/13/2021 - 14:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை