ஆரிய குள அபிவிருத்தியில் மதவிடயங்களுக்கு இடமில்லை

செய்திகளுக்கு யாழ்.மேயர் முற்றுப்புள்ளி

 

ஆரிய குள அபிவிருத்தியில் எந்தவொரு மதச் சார்பு அடையாளங்களையும் உட்புகுத்தப் போவதில்லையென யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஆரிய குளத்தின் மத்தியில் மத நல்லிணக்க மண்டபம் அமைப்பது தொடர்பில் ஊடகங்களில் வெளிவந்த செய்தி தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு நேற்று நடைபெற்றது.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

பத்திரிகையாளர்கள், சமூக ஊடகங்களின் எழுத்தாளர்களின் எழுத்துக்கள் பிரதேச மக்களுடைய அபிவிருத்தியை பாதிக்காததாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். என்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவித்தால் அதனை நான் கண்டுகொள்ளமாட்டேன்.

ஆனால் என்மேல் உள்ள காழ்ப்புணர்ச்சியில் மக்களுக்குக் கிடைக்ககூடிய அபிவிருத்தியை பாதிக்குமாறு எழுதாதீர்கள். ஆரியகுளம் புனரமைப்பு என்பது என்னால் தயாரிக்கப்பட்ட திட்டம். அதில் என்ன உள்ளதுதென்பதை பகிரங்கமாகவே வெளிப்படுத்தியுள்ளோம். இந்த அபிவிருத்தியில் எந்தவொரு மத சார்பு அடையாளங்களையும் உட்புகுத்தவில்லை. உட்புகுத்தப் போவதுமில்லை. நான் முதல்வராக இருக்கும் வரை குளத்தில் எந்தவொரு மதமும் பிரதிபலிக்க இடமளிக்கப்படமாட்டாது. இது தொடர்பில் மக்கள் அச்சப்பட வேண்டாம். மக்கள் அச்சப்படும் வகையில் போலியான தகவல்களைப் பரப்புவதை தவிர்க்குமாறு ஊடகம் மற்றும் சமூக வலைத்தள எழுத்தாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார்.

 

யாழ்.குறூப் நிருபர்

Mon, 10/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை