காதலுக்காக அரச குடும்பத்தை கைவிட்ட ஜப்பானிய இளவரசி

ஜப்பான் இளவரசி மகோ தனது அரச குடும்ப அந்தஸ்தை கைவிட்டு கல்லூரிக் காதலனை நேற்று திருமணம் புரிந்துள்ளார். ஜப்பானிய சட்டத்தின்படி பேரரச குடும்பத்தின் பெண் அங்கத்தவர்கள் பொதுமகன் ஒருவரை திருமணம் புரிந்தால் தமது அந்தஸ்தை இழக்க நேரிடம். ஆண் உறுப்பினர்களுக்கு இந்த கட்டுப்பாடு இல்லை.

இதனால் அரச குடுப்பத்திற்குரிய திருமண நிகழ்வுக்கான உரிமையையும் இழந்த மகோ, குடும்பத்தில் இருந்து வெளியேறும் நிலையில் அவருக்கு குடும்பத்தினர் வழங்க முன்வந்த பணத்தையும் அவர் நிராகரித்துள்ளார்.

இந்த இரண்டையும் நிராகரித்த முதலாவது அரச குடும்ப பெண் உறுப்பிராகவும் அவர் உள்ளார்.

தனது கணவரான கொமுரோ ஒரு சட்டத்தரணியாக பணியாற்றும் நிலையில் திருமணத்தின் பின் இருவரும் அமெரிக்காவில் குடியேற திட்டமிட்டுள்ளனர்.

கொமுரு மற்றும் இளவரசி மகோ கடந்த 2018ஆம் ஆண்டே திருமணம் செய்து கொள்ள தீர்மானித்திருந்தனர். ஆனால் கொமுருவின் குடும்பம் சில நிதி சார் பிரச்சினைகளை எதிர்கொண்டதால் திருமணம் ஒத்திப் போனது. கொமுரு மற்றும் இளவரசி மகோ கடந்த 2012ஆம் ஆண்டு, டோக்கியோவில் உள்ள சர்வதேச கிறிஸ்தவ பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Wed, 10/27/2021 - 10:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை