ஊடகங்களில் தவறாக பரப்பப்படும் கருத்துகளுக்கு அமைச்சர் விமல் வீரவங்சவினால் தெளிவுபடுத்தல்

அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் என்னால் கூறப்பட்ட கருத்துகள் தவறாக அர்த்தப்படுத்தப்பட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது. என்னால் கூறப்படாத கருத்துகளும் மற்றும் கூறப்பட்ட கருத்துகளும் தவறாக அர்த்தப்படுத்தப்பட்டு ஊடகங்களில் பகிரப்படுவதால் அதனை நான் தெளிவு படுத்துவது அவசியமாகும்.

நான் அங்கு கூறிய விடயங்கள்,

பல எதிர்பாரப்புகளுடன் மக்கள் தற்போதைய அரசாங்கத்தின் மீது வைத்த நம்பிக்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததை செய்யாததனால் அல்ல, எதிர்பார்க்காததை செய்வதாலாகும். தொடர்ந்தும் அவ்வாறே நடைபெறுவதால் மக்களிடம் தோன்றும் அவநம்பிக்கை மற்றும் விரக்தியை இல்லாதொழித்து நம்பிக்கையை உறுதி செய்ய வேண்டியுள்ளது.

நாட்டிற்கு முக்கியமான முடிவுகளை எடுக்கும் அமைச்சரவை பத்திரங்களை அமைச்சரவைக்கு ஒரே நாளில் கொண்டு வந்து அங்கீகாரம் பெறுவதை விட அமைச்சரவையில் போதுமான காலம் விவாதம் நடத்தி அந்த அமைச்சரவை பத்திரத்துக்கு அங்கீகாரம் பெறுவதே நல்லது. அதன் மூலம் பின்னர் மாற்றமடையாத முடிவுகளை எடுக்க அரசால் முடியும்.

ஜனாதிபதி நேரடியாக அரசியலில் தலையிட வேண்டியது வெகு விரைவில் நடைபெற வேண்டும். இணைந்து முடிவுகளை எடுப்பதற்காக கட்சி தலைவர்கள் கூட்டம் போன்ற கூட்டங்களில் ஜனாதிபதி கலந்து கொள்வது அவசியம். ஜனாதிபதி அரசியலில் நேரடியாக தலையிடுவதன் மூலம் அநேகமான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

மேற் கண்ட விடயம் என்னால் அமைச்சரவை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட போதும் அதனை திரிபு படுத்தி பரப்புவதை தடுப்பதற்காகவே இவ்வாறு தெளிவு படுத்த எண்ணிணேன். அமைச்சரவை குழுவின் கூட்டுப் பொறுப்புக்கு அதன் மூலம் பாதிப்பு ஏற்படாதென நம்புகிறேன்.

Mon, 10/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை