அரசு இறக்குமதி செய்த முதல் தொகுதி அரிசி இன்று நாட்டிற்கு

கிலோ 100 ரூபாவுக்கும் குறைந்த விலையில்

 

நாட்டில் நிலவும் அரிசி விலை அதிகரிப்பு மற்றும் அரிசிக்கான தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை அரிசி இன்று நாட்டை வந்தடையுமென வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்படும் அரிசியை நூறு ரூபாவுக்கும் குறைவான விலையில்  விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரிசி விலை அதிகரிப்பு தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வந்துள்ளதையடுத்து அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்து குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் அரிசியின் முதலாவது தொகுதி இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாகவும் அவற்றை ச.தொ.ச மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளூடாக விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை எதிர்வரும் காலங்களில் மேலும் சில அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்து குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 10/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை