நடத்துனர்களின்றி பஸ் போக்குவரத்து

அரசுக்கு கெமுனு யோசனை

நடத்துனர் அல்லது சாரதி உதவியாளர்களின்றி பயணிகள் பஸ் சேவையை நடத்தக்கூடிய வகையில் மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தைத் திருத்துமாறு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் போக்குவரத்து அமைச்சுக்கு யோசனை முன்வைத்துள்ளது.

இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இந்த யோசனையை முன் வைத்துள்ளார். கொவிட்-19 காரணமாக தனியார் பஸ் தொழில்துறையின் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதோடு பணியாளர்களின் வெற்றிடம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனைக் கருத்திற்கொண்டு இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Sat, 10/23/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை