லலித் அத்துலத்முதலி மஹபொல புலமைப்பரிசில் நிதியமாகிறது

சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி

மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர்,

உயர்கல்விக்கான கதவுகளை திறக்க மஹபொல புலமைப்பரிசில் திட்டத்தை லலித் அதுலத் முதலி தனது சொந்த நிதியில் ஆரம்பித்தார். 15 ஆயிரத்திற்கும் அதிகமான உயர்கல்வி மாணவர்களுக்கு வருடாந்தம் புலமைப்பரிசில் வழங்கப்படுகிறது.

அதன் தலைமை பிரதம நீதியரசருக்கு வழங்கப்பட்டிருந்தது. கடந்த ஆட்சியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம், சட்டபூர்வமற்ற ஒப்பந்தம் மூலம் தனியாருக்கு வழங்கப்பட்டது. இந்த மோசடியினால் பிரதம நீதியரசர் மஹபொல பொறுப்பு நிதிய தலைமை பொறுப்பை நிராகரித்தார்.

அந்த பொறுப்பை மீள ஏற்குமாறு நான் அவரை கோரினாலும் அவர் அதனை ஏற்க மறுத்தார். அந்த பொறுப்பை தற்பொழுது நான் ஏற்றுள்ளேன். அதனை நான் விரும்பவில்லை.

மஹபொல புலமைப்பரிசில் சட்டத்தை மாற்றி லலித் அதுலத் முதலி மஹபொல உயர்கல்வி புலமைப் பரிசில் நிதியம் என பெயர் மாற்றப்படுகிறது.

தலைமை பதவிக்கு ஜனாதிபதி பிரேரிக்கும் உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் ஒருவரை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டத் திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.(பா)

ஷம்ஸ் பாஹிம்

Wed, 10/13/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை