ஊழல், முறைகேடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை

சில அரச நிறுவனங்கள் தொடர்பில் அறிக்கை கோரல்

 

அரச நிறுவனங்களின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் ஊழல் மற்றும் முறைகேடுளைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆய்வுசெய்து அறிக்க சமர்ப்பிக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷ பத்து பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழுவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதற்கிணங்க, இலங்கை சுங்கம்,  தேசிய வருமான வரித் திணைக்களம், கலால் திணைக்களம், மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழு, சமுர்த்தி திணைக்களம் மற்றும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஆகியன தொடர்பிலே ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நிதியமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் போது மேற்படி நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்குகையில் மேற்கொள்ளவேண்டிய முறைமை சம்பந்தமாக கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதே அறிக்கை கோரலுக்கான நோக்கம் என்றும் நிதியமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. (ஸ)

 லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 10/16/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை