லெபனான் எண்ணெய் நிலையத்தில் பாரிய தீ

லெபனானில் பெரும் எரிபொருள் பற்றாக்குறை இருந்து வரும் நிலையில் தெற்கு லெபனானில் உள்ள எண்ணெய் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீயை தீயணைப்பு வீரர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

சஹ்ரானி எண்ணெய் நிலையத்தில் இராணுவத்திற்கு சொந்தமான பொற்றோல் டாங்கி ஒன்றிலேயே நேற்றுக் காலை இந்தப் பாரிய தீ ஏற்பட்டு வானை நோக்கி கரும்புகை வெளியானது. இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இந்த எண்ணெய் நிலையம் நாட்டின் இரு மிகப்பெரிய மின் உற்பத்தி நிலைங்களுக்கு அருகில் உள்ளது. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இந்த இரு மின் உற்பத்தி நிலையங்களும் இரு தினங்களுக்கு முன் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனால் நாட்டில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்ட நிலையில் இந்த மின் உற்பத்தி நிலையங்களை மீண்டும் செயற்படுத்துவதற்கு இராணுவம் அவசர எரிவாயு எண்ணெய் விநியோகத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Tue, 10/12/2021 - 10:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை