ஆசிரியர்களது சேவை பெருமைக்குரிய பணி

ஜனாதிபதி டுவிட்டரில் ஆசிரியர் தின வாழ்த்து

 இன்று உலக ஆசிரியர் தினம். ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி சர்வதேச ஆசிரியர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. எனினும் இலங்கையில் ஆசிரியர் தினம் ஆறாம் திகதி (இன்று) கொண்டாடப்படுகிறது. உலக ஆசிரியர் தினத்தையொட்டி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஒரு குறிப்பை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பிள்ளைகளை நல்லொழுக்கமுள்ள, பண்பான மற்றும் அறிவுள்ள குழந்தையாக மாற்றி, தெளிவான எதிர்காலத்தை நோக்கி வழிகாட்டி பிள்ளைகளை சமூகமயமாக்கும் பணியை பெற்றோருக்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்து ஆசிரியரே செய்கிறார். இத்தகைய பெருமைக்குரிய மற்றும் கௌரவமான தொழிலில் ஈடுபட்டுள்ள உங்கள் அனைவருக்கும் இன்று எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதோடு அறிவு, ஞானம் மற்றும் ஒழுக்கத்துடன் மேலும் பல குழந்தைகளை உருவாக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன், என தெரிவித்துள்ளார் .

Wed, 10/06/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை