தென்சீனக் கடலில் சீனாவின் அத்துமீறல்கள்

ஆத்திரமூட்டலை நிறுத்துமாறு பிலிப்பைன்ஸ் எச்சரிக்கை

தென்சீனக் கடலில் பிலிப்பைன்சுக்கு எதிரான ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளில் சீனா தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாகவும் இந்த ஆண்டில் மாத்திரம் பிலிப்பைன்ஸ் விடுத்திருக்கும் ஆட்சேபனைகள், எச்சரிக்கைகளின் எண்ணிக்கையான 211 இல் 153 சீனாவின் அத்துமீறல்களுக்கு எதிரானவை என்றும் அந்நாட்டின் ரேடியோ பிரி ஆசியா வெளிவிவகார அமைச்சை ஆதாரம் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் ரோந்து படகுகள் பணியில் ஈடுபட்டிருக்கும் போது வானொலி சமிக்ஙைகள் ஊடாகவும், சைரன் ஒலியை எழுப்புவது ஊடாகவும், அனாவசியமாக ‘ஹோர்ன்’ ஒலியை எழுப்புவது மூலமும் சீனக் கப்பல்கள் 200க்கும் அதிகமான ஆத்திரமூட்டல்களில் ஈடுபட்டுள்ளன என பிலிப்பைன்ஸ் வெவிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தென் சீனக் கடலில் தனது கடல் எல்லைகளுக்குள் பிலிப்பைன்ஸ் மேற்கொள்ளும் ரோந்து நடவடிக்கைகளுக்கு எதிராக சீனா நடந்துகொள்ளும் முறையானது தென்சீனக் கடலின் அமைதிக்கும், நல் உறவுகளுக்கும், பாதுகாப்புக்கும் விரோதமானவை என வெளிவிவகார அமைச்சு விடுத்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

பிலிப்பைன்ஸ் கடல் பகுதிக்குள் காணப்படும் ஸ்ப்ராட்லி தீவுகளுக்கு அண்மையில் கடந்த மார்ச் மாதம் நூற்றுக்கணக்கான சீனப்படகுகள் காணப்பட்ட போது இராஜதந்திர ரீதியான எதிர்ப்பை பிலிப்பைன்ஸ் வெளியிட்டிருந்தது. 2016ஆம் ஆண்டிலிருந்து இதுவரை சீனாவுக்கு எதிரான நூறு இராஜதந்திர முறைப்பாடுகளை பிலிப்பைன்ஸ் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tue, 10/26/2021 - 10:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை