கனடாவில் தடுப்பூசி கட்டுப்பாடு தீவிரம்

கனடாவில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் புதிய நடைமுறைப்படி ரயில், விமானம், கப்பல் ஆகியவற்றில் பயணம் செய்வோரும் ஊழியர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மத்திய அரசாங்க ஊழியர்கள், சம்பளமற்ற விடுப்பில் அனுப்பப்படுவர் என்று அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.

கனடாவின் மொத்த ஊழியர் அணியில், 8 வீதத்தினர் மத்திய அரசாங்க ஊழியர்களாக உள்ளனர்.

தடுப்பூசி போடப்பட்டுள்ளதா என்பது குறித்து தகவலை, அவர்கள் இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

“நீங்கள் சரியான செயலைச் செய்து, தடுப்பூசி போட்டிருந்தால், வைரஸ் பரவலிலிருந்து பாதுகாப்புப் பெறும் சுதந்திரத்தை அடையத் தகுதி பெற்றுள்ளீர்கள்,” என்று ட்ரூடோ குறிப்பிட்டார்.

அவர் தமது தேர்தல் பிரசாரத்தின்போது தடுப்பூசி போட்டுக்கொள்வதைக் கட்டாயமாக்குவது குறித்துக் கூறியிருந்தார்.

கனடாவில் தடுப்பு மருந்துக்குத் தகுதிபெற்றோரில் 80 வீதத்தினருக்கும் அதிகமானோர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுவிட்டனர்.

Fri, 10/08/2021 - 14:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை