- தலதா மாளிகையில் வழிபாடுகளுடன் விஜயம் ஆரம்பம்
இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இன்றையதினம் (03) திருகோணமலையில் உள்ள எண்ணெய்தாங்கி தொகுதிகளை பார்வையிட்டார்.
இந்த எண்ணெய் தாங்கிகளின் (Lower Tank Farms) தற்போதைய அபிவிருத்திகள் மற்றும் இலங்கையின் வலு சக்தி துறைப்பாதுகாப்பினை மேம்படுத்துவதற்காக இந்திய – இலங்கை பங்குடைமையை மேலும் வலுவாக்குவதற்கான சாத்தியங்கள் குறித்தும் LIOC அதிகாரிகளால் அவருக்கு விளக்கமளிக்கப்பட்டதாக, இலங்கையிலுள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
LIOC நிறுவனத்தின் புதிய தயாரிப்பான 'Servo Pride ALT 15W-40'இனை இந்த விஜயத்தின்போது அறிமுகம் செய்துவைப்பதற்காக LIOC நிறுவனத்துடன் இணைந்துகொண்டமை குறித்து வெளியுறவு செயலர் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினார்.
Foreign Secretary @harshvshringla was happy to be with LIOC for the launch of LIOC's new product - 'Servo Pride ALT 15W-40' during the visit.@LankaIOC pic.twitter.com/dsKoSPN3SB
— India in Sri Lanka (@IndiainSL) October 3, 2021
4 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா நேற்றையதினம் (02) இலங்கை வந்தடைந்தார்.
இந்திய உயர் ஸ்தானிகர் மற்றும் இலங்கை வெளிவிவகார செயலாளர் ஓய்வு பெற்ற அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் வெளியுறவுச் செயலாளரை விமான நிலையத்தில் வரவேற்றிருந்தனர்.
இன்றையதினம் (03) வெளியுறவு செயலாளர், ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாட்டினை மேற்கொண்டு ஆசிபெற்று தனது விஜயத்தினை ஆரம்பித்ததோடு, இதன்போது தலதா மாளிகையின் தியவடன நிலமேயினால் வெளியுறவு செயலருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.
Indian Foreign Secretary - Mr Harsh Vardhan Shringla, who is on an official tour visited the temple of the Sacred Tooth Relic today(October 03) to pay his respect and to obtain blessings. @IndiainSL @AhciKandy @indiandiplomats @MFA_SriLanka pic.twitter.com/ttvHpz0YAM
— Sri Dalada Maligawa Kandy (@SriDalada) October 3, 2021
நூற்றாண்டுகள் பழைமைவாய்ந்த பிணைப்பினை வலுவாக்கும் வகையிலும், இந்திய - இலங்கை மக்களின் நலன் மற்றும் செழுமைக்காகவும், வெளியுறவுச் செயலாளர் வழிபாடுகளை மேற்கொண்டிருந்ததாக தூதகரம் தெரிவித்துள்ளது.
from tkn