எந்தவொரு எல்லைக்கும் செல்ல தயாராகவுள்ளோம்

ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் சூளுரை

 

அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொள்ள எந்தவொரு எல்லைக்கும் செல்வோம் என ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தினமான நேற்றைய தினத்தில் தங்களுடைய சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரி அதிபர், ஆசிரியர்  சங்கங்கள் நாடளாவிய ரீதியில் போராட்டங்களை மேற்கொண்டனர்.

சம்பளப் பிரச்சினையைத் தீர்ப்பது குறித்து தங்களுடன் கலந்துரையாடல் நடத்துமாறு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் சங்கங்கள் அரசாங்கத்தை வலியுறுத்தின.

கொழும்பு, லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் நேற்று காலை 10 மணியளவில் இந்த போராட்டம் ஆரம்பமான அதேவேளை, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொள்ள எந்தவொரு எல்லைக்கும் செல்வதாக ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது தெரிவித்துள்ளார்.

Thu, 10/07/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை