இந்தோனேசியாவில் மாணவர்கள் பதினொருவர் ஆற்றில் மூழ்கி பலி

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா வட்டாரத்தில், ஆற்றுச் சுத்திகரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த 11 பாடசாலை மாணவர்கள் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதன்போது 10 பேர் காப்பாற்றப்பட்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 15) இஸ்லாமியப் பாடசாலையைச் சேர்ந்த 150 மாணவர்கள், சிலியூர் ஆற்றின் சுத்திகரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்ததாக உள்ளூர் அதிகாரிகள் கூறினர்.

அப்போது 21 மாணவர்கள் வழுக்கி ஆற்றில் விழுந்தனர்.

வானிலை நன்றாக இருந்தது என்றும் திடீர் வெள்ளம் ஏதும் ஏற்படவில்லை என்றும் மீட்புப் பணியின் தலைவர் குறிப்பிட்டார்.

மூழ்கிய மாணவர்கள் அனைவரும் ஒருவரையொருவர் பிடித்துக்கொண்டிருந்தனர். அதனால், ஒருவர் ஆற்றில் விழுந்ததும் மற்றவர்களும் விழுந்தனர் என்று அவர் குறிப்பிட்டார்.

அவர்களில் 10 பேர் காப்பாற்றப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

மாணவர்கள் மிதப்பதற்கு உதவும் சாதனங்கள் எதனையும் அணியவில்லை என்று கூறப்படுகிறது.

Mon, 10/18/2021 - 09:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை