கைவிடப்பட்ட கலாசார மண்டபத்தை பாடசாலை மாணவர்களுக்கு வழங்கவும்

கைவிடப்பட்ட கலாசார மண்டபத்தை பாடசாலை மாணவர்களுக்கு வழங்கவும்-Abandoned Hall-Nanu Oya

- டெஸ்போர்ட் தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர்கள் சங்கம் கோரிக்கை

நானுஓயா கிரிமிட்ய 476A கிராம சேவகர் பிரிவில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் கலாசார மண்டபத்தை கற்றலுக்காக பயன்டுத்த அனுமதி வழங்க வேண்டும் என டெஸ்போர்ட் த. ம.வித்தியாலய பழைய மாணவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நுவரெலியா நானுஓயா கிரிமிட்ய 476A கிராம சேவகர் பிரிவில் கிரிமிட்ய நகரை அண்மித்த பிரதேசத்தில் மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பன்முகடுத்தப்பட்ட நிதியில்10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 2015ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கலா சார மண்டபம் இதுவரையில் கட்டடம் முழுமையாக கட்டப்படாமல் இருக்கின்றது.

கைவிடப்பட்ட கலாசார மண்டபத்தை பாடசாலை மாணவர்களுக்கு வழங்கவும்-Abandoned Hall-Nanu Oya

இக் கட்டடத்தை புனரமைத்து நுவரெலியா நானுஓயா டெஸ்போர்ட் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு வழங்குமாறு பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளர் பாஸ்கரன் மத்திய மாகாண ஆளுநரிடம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

டெஸ்போர்ட் தமிழ் மகா வித்தியாலயத்தில் கற்றலுக்கு ஏற்ற கட்டட வசதிகளோ அடிப்படை வசதி இல்லை. இதனால் மாணவர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இருந்த போதிலும் 2019 ஆம் ஆண்டு கா பொ த சாதாரண தரத்தில் சுமார் 64 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

இதில் அதிகமான மாணவர்கள் உயர்தரத்தில வர்த்தகப் பிரிவில் கல்வியை தொடர விரும்புகின்றனர். எனினும் இதற்கு போதுமான கட்டட, தளபாட வசதிகள், ஆசிரியர்கள் இல்லை. இவ்வேளையில் இப்பாடசாலைக்கு புதிய கட்டட வசதி கிடைப்பது கடினம். ஆகையால் இப்பிரதேசத்தில் கைவிடப்பட்ட கலாசார மண்டபத்தை புனரமைத்து மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கு வசதிகளை செய்து கொடுக்குமாறு பழைய மாணவர் சங்கத்தின் சார்பில் மத்திய மாகாண ஆளுநருக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளேன் என அவர் தெரிவித்தார்.

Wed, 10/13/2021 - 16:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை