சூடானுக்கான உதவியை நிறுத்தியது உலக வங்கி

சூடானில் சிவில் அரசுக்கு எதிராக இராணுவம் மேற்கொண்ட ஆட்சிக் கவிழ்ப்பை அடுத்து அந்நாட்டுக்கான உதவிகளை உலக வங்கி இடைநிறுத்தியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டது நாட்டில் பெரும் ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியதோடு சர்வதேச கண்டனங்களுக்கும் காரணமானது.

இந்நிலையில் சட்டவிரோதமாக ஆட்சியை கைப்பற்றியதற்கு ஆபிரிக்க ஒன்றியம் சூடானை அந்த அமைப்பில் இருந்து இடைநிறுத்தியுள்ளது. அமெரிக்கா சூடானுக்கான 700 மில்லியன டொலர் உதவியை முடக்கியது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகாரப் பகிர்வு உடன்படிக்கையின் கீழ் ஆட்சியில் இருந்த சிவில் மற்றும் இராணுவத் தலைவர்களுக்கு இடையே தொடர்ந்து முறுகல் நிலை இருந்து வந்தது.

இந்நிலையில் பொருளாதார நெருக்கிடியில் இருந்து மீண்டு வர ஆரம்பித்த விரைவிலேயே சூடானுக்கான உதவிகள் நிறுத்தப்பட்டிருப்பது அந்த நாட்டுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்துவதாக இருக்கும்.

மார்ச் மாதத்தில், சூடான் தனது நிலுவைத் தொகையை சரிசெய்த பின்னர், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளில் முதல் முறையாக உலக வங்கியிடமிருந்து பில்லியன் கணக்கான டொலர்களை மானியமாக அணுக முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

Fri, 10/29/2021 - 10:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை