சிறுவரது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவது அவசியம்

ஜனாதிபதி கோட்டாபய சிறுவர் தின வாழ்த்து

உலகம் தற்போது முகம்கொடுத்திருக்கும் தொற்றுப் பரவலுக்கு மத்தியில், அனைத்துச் சிறுவர் சமுதாயத்தினதும் எதிர்பார்ப்புகளுடன் கூடிய சிறுவர் உலகத்துக்கான வரையறைகள் அதிகரித்துள்ளன. பாடசாலை வகுப்பறைகள், விளையாட்டு மைதானங்கள் என்பன, இன்னமும் எமது பிள்ளைகளுக்குத் தொலைதூரமாகியுள்ளன. எமது தேசத்தின் பிள்ளைகள் இழந்துள்ள அந்த அனைத்து எதிர்பார்ப்புகளையும், மிகவும் பாதுகாப்பாக மீளப் பெற்றுக்கொடுப்பதே, அரசாங்கத்தின் முதல் கடமையாக உள்ளது.

சிறுவர்களின் உலகத்தை அவர்களுக்கு மிக விரைவில் பெற்றுக்கொடுப்பதற்கே எங்களுடைய ஒட்டுமொத்தத் திட்டங்களும் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. தமது பிள்ளைகள் மிகச் சிறந்தவர்களாக சமூகமயப்படும் போது, அதனால் திருப்தியடையப் போவது அவர்களின் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் மாத்திரமல்ல , அந்த சந்தோஷம், நாட்டின் ஒட்டுமொத்த மனிதச் சமுதாயத்துக்கும் கிடைக்கிறது. அவ்வாறான அனுபவங்கள் உலகில் ஏராளம் உள்ளன. அவ்வாறான சந்தர்ப்பங்கள் எதிர்காலத்திலும் உருவாகுவது நிச்சயம். அதனால், பெரியோர்களாகிய நாம், நல்லொழுக்கமுள்ள குழந்தைகள் தலைமுறையை இந்த நாட்டுக்கும் உலகத்துக்கும் வழங்க வேண்டுமாயின், அந்தக் குழந்தைகளின் அறிவு, மனப்பான்மை மற்றும் திறன்களை நிறைவுசெய்யத் தேவையான பின்னணியை அமைத்துக் கொடுப்பது கட்டாயமாகும். உங்கள் அனைவருக்கும், சுபீட்சமான எதிர்காலம் அமையட்டும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Fri, 10/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை