மோகினி எல்லை நீர்வீழ்ச்சிக்கு அருகில் மண்சரிவு அபாயம்

நல்லதண்ணி பிரதான வீதியின் மோகினி எல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகில் மண்சரிவு அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக கவலைத்தெரிவிக்கப்படுகின்றது. இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வீதி அகலப்படுத்தும் நடவடிக்கையின் போதே மண்சரிவு அபாய நிலை இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை ஏனைய பாதிப்புகள் நிறைந்த இடமாகவும் இது இருப்பதாக கவலைத்தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வீதியானது நல்லதண்ணி நகரம் வரையில் அகலப்படுத்தி செப்பனிடப்பட்டுள்ளது.அதேவேளை மோகினி எல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகில் பாரிய அளவில் மண் திட்டுக்களை அகற்றப்பட்டு அகலப்படுத்தப்பட்டுள்ளது.இதனையடுத்து அகலப்படுத்தப்பட்ட இப்பகுதியில் பாரிய கற்கள் காணப்படுவதோடு அவை எவ்வேளையிலும் சரிந்து விழும் அபாய நிலையில் இருப்பதாகவும் கவலைத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த பகுதியில் மரங்கள் வெட்டப்பட்டு அவை பாதையோரங்களிலே கைவிடப்பட்டு இருப்பதால் வாகன சாரதிகளுக்கு பலவகையிலும் அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் காணப்படுகின்றது.குறிப்பாக கைவிடப்பட்ட மரங்களால் சில சந்தர்ப்பங்களில் விபத்துக்கள் ஏற்படுவதற்கான ஒரு சூழல் காணப்படுகின்றது. மேலும் குறித்த பகுதியில் கைவிட்டப்ப மரங்களிலிருந்த உக்கிய கழிவுப்பொருட்கள் அப்பகுதி சூழலுக்கு தீங்கு ஏற்படும் வகையிலும் காணப்படுகின்றது.

அத்துடன் குறித்த பகுதியானது மலையகத்தில் சுற்றுலா துறையினரை கவரும் பகுதியாகும்.அவை இவ்வாறு அழுக்குகள் நிறைந்த ஒரு இடமாக காணப்படுவது இயற்கை வளநிறைந்த சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதேவேளை சுற்றுலா துறைசார்ந்தவர்களுக்கும் பலவழிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே மோகினி எல்ல பகுதியில் ஏற்பட்டுள்ள அபாயகரமான நிலையை கருத்திற் கொண்டு உரிய தரப்பினர்கள் இது விடயத்தில் கவனம் செலுத்தி தீர்வை பெற்றுத்தருமாறு கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.

(கினிகத்தேனை தினகரன் நிருபர்)

 
Tue, 10/05/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை