விவசாயிகள் அதிக இலாபமீட்டும் புதிய விதைப்பு முறை அறிமுகம்

விவசாயிகள் அதிக இலாபமீட்டும் புதிய விதைப்பு முறை அறிமுகம்-New Seeding Methos For More Harvesting

அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெல் விதைப்பு நடவடிக்கையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு ஹேன்ட் ரிட்ச் (Handrich) விவசாய பராமரிப்புத் தீர்வுகள் மற்றும் கைத்தொழில் நிலையத்தின் அனுசரணையுடன், அட்டாளைச்சேனை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் ஒருங்கிணைப்பு மற்றும் வழிகாட்டலுடன் நிறுவனத்தின் தலைவர் எஸ்.எல் முஹம்மது அன்வர் தலைமையில் மீலாத் நகர் விவசாய பிரதேசத்தில் இடம்பெற்றது.

நஞ்சற்ற உணவு உற்பத்தியை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சேதனப் பசளை பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இதன்போது, நெல் வேளாண்மையின் போது விவசாயிகள் அதிக இலாபமீட்டும் ட்ரம் சீடர்(Drum Seeder) இயந்திர முறை ஊடாக நெல் விதைக்கும் முறையும் அதிகாரிகளினால் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதில் அம்பாறை மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ், பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர், விவசாய போதனாசிரியர் ஏ.எச்.எம். முபாறக், கமநல சேவை நிலையத்தின் பெரும்போக உத்தியோகத்தர் எம். சம்சுதீன், ஹேன்ட் ரிட்ச் நிறுவனத்தின் பிரதிநிதிகள், விவசாயிகள், பிரதேச விதை நெல் விநியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

(பெரியநீலாவணை விசேட நிருபர்)

Mon, 10/18/2021 - 09:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை