மீரிகம முதல் பொத்துஹெர வரையான பணிகள் நிறைவு

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமவிலிருந்து பொத்துஹெர வரையான பகுதியில் நிர்மாணப்பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வீதியின் நுழைவாயில் கம்பஹா மாவட்டத்தின் மீரிகமவில் இருந்து வெளியேறும் இடம் குருணாகலில் அமைந்துள்ளது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நிர்மாணப்பணிகள் இடம் பெற்றுவருகின்றன.

கொழும்பில் இருந்து கண்டி, குருணாகல் மற்றும் தம்புள்ளைக்கு பயணம் செய்பவர்களுக்கு இந்த அதிவேக நெடுஞ்சாலை மிகவும் வசதியாக அமையும் என்பது குறிப்பிடத்தகது.

 

Fri, 10/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை