உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நீதியை பெற்றுக்கொடுக்கும்

இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமென தாம் நம்புவதாக இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார். நீர் கொழும்பில் நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்திற்கான யோசனைகளை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சட்ட மா அதிபருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. சட்ட மாஅதிபர் அது தொடர்பில் ஆராய்ந்து வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் அந்தவழக்கு விசாரணைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளது.

அதற்கிணங்க உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட மாஅதிபரும் அரசாங்கமும் நீதியைப் பெற்றுக் கொடுப்பார்களென எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்கு தொடர்பில் நீதியைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. அது தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ள அரசாங்கம் பாராளுமன்றத்திலும் அது தொடர்பில் தெளிவுபடுத்தி வருகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Wed, 10/06/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை