அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றால் கடும் தண்டனை

அமைச்சர் லசந்த அழகியவன்ன எச்சரிக்கை

 

பால்மா, சமையல் எரிவாயு, சீமெந்து மற்றும் கோதுமை மா உள்ளிட்ட நான்கு அத்தியாவசியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலை  நீக்கப்பட்டுள்ள போதும் ஏதாவது நிறுவனம் அநீதியான வகையில் நுகர்வோரை பாதிக்கும் விதத்தில் அதிக விலையதிகரிப்பை மேற்கொள்ளுமானால் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

அநீதியான வகையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை அதிகரித்தால் அதனை சாதாரண நிலைக்கு கொண்டுவரும் முறைமை ஒன்றை நடைமுறைப்படுத்த முடியும் என தெரிவித்துள்ள அவர்,

அநீதியான வகையில் விலை அதிகரிப்பை மேற்கொண்டால் மீண்டும் கட்டுப்பாட்டு விலையை விதிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பால்மா விற்பனை விலையை 350 ரூபாவால் அதிகரிப்பதற்கு அனுமதி தருமாறு இறக்குமதி வர்த்தகர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் அரசாங்கத்தை கோரியிருந்தனர். எனினும் அரசாங்கம் 200 ரூபாவால் அதனை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்துவதாகவே தெரிவித்தது. எவ்வாறாயினும் தற்போது சந்தையில் பால் மாவிற்கு தட்டுப்பாடு நிலவுகிறது. தற்போது உலக சந்தையில் ஆடை நீக்கப்படாத பால்மா 32 விதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 10/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை