போலித்தகவல்களை பரப்பும் நபர்களுக்கு எதிராக புதிய சட்டம்

பாராளுமன்றில் நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு

போலித் தகவல்களைப் பரப்புவோர் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு புதிய சட்ட மூலமொன்று நடைமுறைப்படுத்தவுள்ளதாக நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதேவேளை இந்த சட்டத்தினூடாக சமூக வலைத்தளங்களில் பரவும் போலியான செய்திகள் கட்டுப்படுத்தப்படுமே தவிர, மக்களின் உரிமைகள் மீறப்படமாட்டாதென்றும் அவர் தெளிவுப்படுத்தினார். தொடர்ந்தும் தெரிவித்த அவர், சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் பரப்பப்படுவதைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றும் முன்வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

 

Sat, 10/23/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை