சர்வதேச உறுதிமொழிகளை நிறைவேற்றுவது அவசியம்

GSP+ தொடர்பாக ஐரோ. ஒன்றியம் நினைவூட்டல்

 ஐரோப்பிய சந்தைக்குள் இலங்கை பிரவேசிப்பதற்கு சர்வதேச உறுதிமொழிகளை இலங்கை உரியவாறு நிறைவேற்றுவது அடிப்படை விடயமாகும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை தூதுவர்  டெனிஸ் சைபி தெரிவித்துள்ளார்.

இதன்போது கவனம் செலுத்தப்படவேண்டிய விடயங்கள் குறித்து, 2015 ஆம் ஆண்டு முதல், இலங்கை அரசாங்கத்துடன், செயற்படும் அதேவேளை, விரிவான கருத்தாடல்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் தயாராக உள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி ப்ளஸ் வரிச் சலுகை தொடர்பான கண்காணிப்பு குழு, கடந்த 27 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டது. ஜீ.எஸ்.பி ப்ளஸ் வரிச் சலுகைக்கு அமைவான 27 சர்வதேச உடன்பாடுகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவது தொடர்பான முன்னேற்றம் குறித்து ஆராயும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் விஜயம் அமைந்திருந்தது.

 

Thu, 10/07/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை