பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி அரசியலில் இருந்து ஓய்வு

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டார்ட்டே அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அடுத்து ஆண்டு தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் துணை ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடப்போவதாக டுட்டார்ட்டே கடந்த மாதம் கூறியிருந்தார். பிலிப்பைன்ஸில் ஜனாதிபதி ஒருவருக்கு ஆறு ஆண்டுகள் கொண்ட ஒற்றை தவணைக்கு மாத்திரமே பதவி வகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிலிப்பின் மக்களின் உணர்வுளுக்கு தாம் தகுதி இல்லாததால் அரசியலில் இருந்து வெளியேறுவதாக அவர் தற்போது அறிவித்துள்ளார்.

இந்த முடிவு மூலம் அவரது மகள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராகி வரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

சர்ச்சைக்குரியவரும் பலம்மிக்கவருமாக 2016 ஆம் ஆண்டு அட்சிக்கு வந்த டுட்டார்ட்டே, தனது போதைப் பொருளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளில், பலரும் சட்டத்திற்கு அப்பால் கொல்லப்பட்டதான குற்றச்சாட்டுக்கு உள்ளானார்.

தற்போது தெற்கு நகரான டாவோவின் மேயராக இருக்கும் டுட்டார்ட்டேவின் மகள் சாரா டுட்டார்ட்டே-கார்ப்பியோ, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து சூசகமான கருத்துகளை கூறி வருகிறார்.

Mon, 10/04/2021 - 09:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை