திவாலாகும் நிலையில் சீன ஆதன நிறுவனங்கள்

சீனாவின் மிகப்பெரிய காணி கட்டட விற்பனை நிறுவனமான எவர்கிராண்டே நிறுவனம் பொருளாதார வீழ்ச்சியால் திவாலாகும் நிலையை அடைந்திருப்பதாகவும் 300 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் சுமையில் தவிப்பதாகவும் இதன் காரணமாக தனது டொலர் பிணைகளின் மீதான வட்டியை செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் சீன பொருளாதார தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

இந்நிறுவனம் வீழ்ச்சியடையுமானால் நாட்டில் உள்ள ஏனைய ஆதன விற்பனை நிறுவனங்களும் சிறிய வங்கிகளும் திவாலாகும் வாய்ப்பு உள்ளதாக அச்சம் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் சீன மக்கள் வங்கியின் ஆளுநர் யீ. காங், சீன பொருளாதாரம் ஸ்திர நிலையில் இருந்தாலும் சில நிறுவனங்களின் தவறான நிர்வாகத்தின் காரணமாக சில நிதிச் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாக கூறியுள்ளார்.

இதன் காரணமாக எவர்கிராண்டே நிறுவனத்தை வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றுவதற்காக சீன நிதியியல் துறை நிபுணர்கள் பெரும் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் அதன் மூலம் ஏனைய நிறுவனங்களைப் பாதுகாக்க முடியுமெனவும் தெரிவிக்கப்படுகிறது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாகக் கருதப்படும் சீனா பெருந் தொற்றின் பின்னர் மீண்டு வந்துள்ளது. இவ்வருடம் அதன் பொருளாதார வளர்ச்சி எட்டு சதவீதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.திவாலாகும் நிலையில் சீன ஆதன நிறுவனங்கள்

Fri, 10/22/2021 - 11:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை