குழப்படி செய்யும் சிறுவர்களின் பெற்றோரைத் தண்டிக்கும் சட்டம்

மோசமான குணவியல்புகளையும் மற்றும் குற்ற நடத்தையும் கொண்ட சிறுவர்களின் பெற்றோரைத் தண்டிக்கும் சட்டத்தை சீன அரசு நடைமுறைக்குக் கொண்டுவரவுள்ளது. குடும்பக் கல்வி அபிவிருத்தி மசோதா என்ற பெயருடைய இது சீன பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதும் தவறு செய்யும் அல்லது குழப்படி செய்யும் சிறுவர்களின் பெற்றோர் தண்டிக்கப்பட முடியும் என்பதோடு கிரிமினில் நடவடிக்கைகளில் ஈடுபடும் சிறுவர்களின் பெற்றோர் குடும்பக் கல்வித்திட்டத்துக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று ரோய்ட்டர் தெரிவித்துள்ளது.

தேசிய மக்கள் காங்கிரசின் கீழ் இயங்கும் சட்ட விவகார ஆணைக்குழுவின் பேச்சாளர் ஸாங்டைவி இது தொடர்பாக குறிப்பிடுகையில் சிறுவர்களின் தவறான நடத்தைகளுக்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணியாக விளங்குவது குடும்ப ஒழுக்கக் கல்வியின்மை அல்லது அது போதுமானதாக இல்லாமையே என்று கூறியுள்ளார். இம் மசோதா தேசிய மக்கள் காங்கிரசின் நிலையியல் குழுவின் பரிசீலணைக்கு உட்படுத்தப்படவுள்ளது. பெற்றோர் தமது பிள்ளைகளை ஓய்வாக இருக்கவும் விளையாடவும் உடற்பயிற்சி செய்யவும் நேரம் ஒதுக்கித்தர வேண்டும் என சீன கல்வித்துறை கருதுகிறது.

சீன மாணவர் மற்றும் இளைஞர் சமூக ஒழுக்கம் தொடர்பான கரிசனைகளை இவ்வருடத்தில் இருந்து சீன அரசு வெளியிட்டு வருகிறது. இணைய தயாரிப்புகளில் தோன்றும் நாயக நாயகியரை சாதனை வீரர்களாகக் கருதி வழிபடுவது, ஒன்லைன் விளையாட்டுகளில் மூழ்கிக் கிடப்பது தொடர்பாக பெற்றோர் கரிசனை கொள்ள வேண்டுமென சீன அரசு கருதுகிறது. மேலும் சீன இளைஞர்கள் பெண் தன்மை கொண்டவர்களாக விளங்குவதாகவும் அவர்கள் ஆண்களாக நடந்து கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்து வருகிறது.

Sat, 10/23/2021 - 12:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை