நிரூபமாவின் சொத்து விபரத்தை வெளிப்படுத்துமாறு கோரிக்கை

தகவலறியும் உரிமையில் ட்ரான்ஸ் பேரன்ஸி இன்டர்நெஷனல் விண்ணப்பம்

ட்ரான்ஸ் பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு, முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் சொத்து விபரங்களை வெளிப்படுத்துமாறு கோரி தேர்தல்கள் ஆணைக்குழு, பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதி அலுவலகம் ஆகியவற்றுக்கு தகவல் அறியும் உரிமை விண்ணப்பப்படிவங்களை அனுப்பி வைத்துள்ளது. 1975 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பிரகடன சட்டத்திற்கு அமைவாக, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட பதவி வகிக்கும் அரச அதிகாரிகள் தமது வாழ்க்கைத் துணை மற்றும் அவரைச் சார்ந்துள்ள பிள்ளைகளின் சொத்துக்கள், பொறுப்புக்கள் உள்ளடங்கலான சொத்து மற்றும் பொறுப்புக்களின் வருடாந்த பிரகடனங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

அதேவேளை இவ்விடயத்தில் பணத்தூயதாக்கல் இடம்பெற்றிருக்கக் கூடுமா? என்பது குறித்து உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிற்கும் கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்று ட்ரான்ஸ் பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.

Mon, 10/18/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை