யாழ். வைத்தியசாலை படுகொலை; நினைவுத்தூபி விரைவில்

யாழ். வைத்தியசாலை படுகொலை; நினைவுத்தூபி விரைவில்-Dr T Sathiyamoorthy-Jaffna Teaching Hospital

இந்திய இராணுவத்தினரால் இலங்கையின் வடபகுதியில் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக விரைவில் நினைவுத்தூபி அமைக்கப்படும் என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்திய இராணுவத்தினரால் வடக்கில் படுகொலை செய்யப்பட்டோரின் உறவுகளால் உயிரிழந்தோரின் நினைவாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்தில் ஒரு தூபி அமைப்பதற்கு தமக்கு இடம் ஒதுக்கித் தருமாறு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்த விடயம் தொடர்பில் தமது வைத்தியசாலையின் பல்வேறுபட்ட குழுக்களின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் புதிய வசதி ஒன்று செய்யப்பட்டு ஒரு பொருத்தமான இடம் தெரிவு செய்யப்பட்டு நினைவுத்தூபி அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Fri, 10/22/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை