அக்கரைப்பற்றில் உரம் ​வேண்டி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

அக்கரைப்பற்றில் உரம் ​வேண்டி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்-Protest-Fertilizer-Akkaraipattu

அக்கரைப்பற்று விவசாயிகள் இரசாயன உரம் கோரியும் தாம் எதிநோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடித்தீர்வு வேண்டியும் கண்டன போராட்டமொன்றை அண்மையில், அக்கரைப்பற்று கல்லோயா வலது கரை வாய்க்கால் வதிவிட திட்ட முகாமையாளர் காரியாலய முன்றலில் நடாத்தினர்.

அக்கரைப்பற்று விவசாயிகள் அமைப்பினரால் ஒழுங்குசெய்யப்பட்ட இக்கண்டன போராட்டத்தில் பெருவாரியான விவசாயிகள் கலந்துகொண்டு தமது கோரிக்கைகளை முன்வைத்து கோஷமெழுப்பினர்.

அக்கரைப்பற்று விவசாயிகள் சம்மேளனத்தின் தலைவர் எ.ஜி.சிராஜ்டீன் தலைமையில் நடைபெற்ற இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், “விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே!, வேண்டும் வேண்டும் இரசாயன உரம் வேண்டும்!, அரசே போதும் போதும் விலை ஏற்றம்!, உயர்த்தாதே பொருட்களின் விலையை!, அரசே வாழவிடு! விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே போன்ற வாசகங்களை தாங்கியவாறு கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அட்டாளைச்சேனை குறூப், அக்கரைப்பற்று மேற்கு நிருபர்கள்

Mon, 10/25/2021 - 09:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை