பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமையில் நவராத்திரி விழா நேற்று முன்தினம்

உற்பத்தி பொருளாதார திட்டங்களுக்கு பட்ஜட்டில் மேலதிக நிதி

 

நாட்டில் எந்த விதத்திலும் பஞ்சம் ஏற்படுவதற்கு ஒரு போதும் இடமளிக்கப்போவதில்லை என நிதியமைச்சர் பெசில் ராஜபக்‌ஷ விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயுடனான பேச்சுவார்த்தையின் போது தெரிவித்துள்ளார். அதேவேளை அபிவிருத்தித் திட்டங்கள் சாத்தியமாக முன்னெடுக்கப்படா விட்டால்  அவற்றுக்கு நிதி வழங்குவது நிறுத்தப்படும் எனவும் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

திட்டங்கள் சம்பந்தமாக எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் ஒரு வருடத்திற்கும் முழுமையான நிதி ஒதுக்கப் போவதில்லை என தெரிவித்துள்ள அமைச்சர், திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் கண்காணிப்பு மேற்கொண்டதன் பின்னரே நிதி பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சாத்தியமானதாக முன்னெடுக்கப்படாத திட்டங்களுக்கு மீண்டும் நிதி வழங்குவது நிறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் உணவு பாதுகாப்பு தொடர்பில் விவசாய அமைச்சு மற்றும் அதனோடு இணைந்த இராஜாங்க அமைச்சர்களுடன் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ விசேட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

இம்முறை வரவு செலவு திட்டத்தில் ஒவ்வொரு அமைச்சுக்கும் ஒதுக்கப்படும் நிதிக்கு மேலதிகமாக அந்தந்த அமைச்சுக்கள் சமர்ப்பித்துள்ள உற்பத்தி பொருளாதாரத்துடன் சம்பந்தப்பட்ட பல்வேறு திட்டங்களுக்காக மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 10/14/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை