பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள்: இரு தினங்களுக்குள் கொள்கலன்கள் விடுவிப்பு

துறைமுகத்தல் தேங்கியுள்ள பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கு தேவையான 50 மில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளது. எனவே பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய அனைத்து கொள்கலன் களையும் இரு தினங்களுக்குள்

விடுவித்துக் கொள்ள முடியும் எனஅமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று புதன்கிழமை நடைபெற்ற போது அவர் இதனைத் தெரிவித்தார். துறைமுகத்தல் தேங்கியுள்ள பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கு தேவையான 50 மில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுனர் தெரிவித்துள்ளார்.

சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு சுங்க திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள கொள்கலன்கள் தவிர ஏனைய கொள்கலன்களையும் இரு தினங்களுக்குள் விடுவித்துக் கொள்ள முடியும்.

அரச கொள்கையை மாற்றி அரிசியை இறக்குமதி செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் கூட மக்களை எதிர்கொண்டுள்ள அசௌகரியங்களை குறைப்பதற்காகவேயாகும். எனவே எதிர்வரும் சில தினங்களுக்குள் சுமுகமான நிலைமை ஏற்படும் என்று நம்புகின்றோம் என்றார்.

Thu, 10/07/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை