எந்தவொரு தருணத்திலும் இலங்கைக்கு ஒத்துழைப்பு

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

ஆறு இலட்சம் அஸ்ட்ரா செனெகா வழங்கியது முதல் கொவிட் ஒழிப்புக்கு ஜப்பான் செய்து வரும் உதவிகளுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

எந்தவொரு தருணத்திலும் இலங்கைக்கான ஒத்துழைப்பை வழங்கத் தான் முயற்சிப்பதோடு இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை மேலும் பலப்படுத்துவதாக தனது சேவைக் காலத்தை நிறைவு செய்துள்ள இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் தெரிவித்துள்ளார்.

தனது சேவைக் காலத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் சுகியாமா அக்கிரா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஆறு இலட்சம் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகளை ஜப்பானிலிருந்து பெற்றுக் கொள்வதற்கும் கொவிட் தொற்றொழிப்பை வெற்றிகரமாக்கிக் கொள்வதற்கும், தூதுவரால் பல்வேறு வழிமுறைகளில் இந்நாட்டுக்குப் பெற்றுக் கொடுக்கப்பட்ட சேவைகளுக்கு, ஜனாதிபதி இதன் போது பாராட்டுத் தெரிவித்தார். இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை பலப்படுத்திக் கொண்டு, தேவைப்படும் எந்தவொரு தருணத்திலும் இலங்கைக்கான ஒத்துழைப்பை வழங்கத் தான் முயற்சிப்பதாக, ஜனாதிபதியிடம் ஜப்பான் தூதுவர் தெரிவித்துள்ளார்.

 

Tue, 10/26/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை