மாமனாரின் கையை வெட்டி ஆற்றில் வீசினார் மருமகன்

கிளிநொச்சியில் கைகலப்பு முற்றி சம்பவம்

கிளிநொச்சி- கண்டாவளை பகுதியில் காணி பிரச்சினை காரணமாக இடம்பெற்ற கை கலப்பு காரணமாக, மாமனாரின் கையை மருமகன் கொடூரமாக வெட்டி ஆற்றில் வீசிய சம்பவம் பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் அறிந்த உறவினர்களால் காயமடைந்தவர் உடனடியாக தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். சம்பவத்தில் கையை இழந்தவர் 64 வயதுடைய கருணாமூர்த்தியென தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

Wed, 10/13/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை