கர்தினாலுக்கு வத்திக்கான் உறுதுணையாக இருக்கும்

போப் பிரான்சிஸ் மெல்கம் ரஞ்சித்திற்கு கடிதம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் வத்திக்கான் தனது முழு ஆதரவை வழங்குமென்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்திடம் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பில் வத்திக்கான், கர்தினால் மெல்கம் ரஞ்சித்துக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், வத்திக்கான் இலங்கையின் செயல்முறையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அது இலங்கை மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்குமென்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் மெல்கம் ரஞ்சித் கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்க சர்வதேச தலையீடு கோரி கர்தினால் விடுத்த அழைப்புகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Mon, 10/25/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை